இன்று மாலை பூண்டி ஏரி திறப்பு...

0 2771
இன்று மாலை பூண்டி ஏரி திறப்பு... கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

ஆந்திராவில் பெய்துவரும் கனமழையால், அங்குள்ள அணைகள் நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 15ஆயிரம் கன அடி வீதமாக உள்ளது.

இதனிடையே, நிவர் புயல் தாக்கத்தால் பெய்த கனமழை காரணமாகவும், 35 அடி மொத்த உயரம் கொண்ட பூண்டி ஏரி 33.6 அடிக்கு நிரம்பியுள்ளது. நீர் மட்டம் மேலும் உயரக்கூடும் என்பதால், பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறக்கப்படவுள்ளது.

நீர்மட்டம் உயரும் பட்சத்தில் ஆயிரம் கன அடியில் இருந்து படிப்படியாக நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் வரை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments