ஆசிய அளவில் லஞ்சம் பெறும் நாடுகளில் இந்தியா முதலிடம்!

0 2513

ஆசியா அளவில் லஞ்சம் பெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. ஜப்பான் லஞ்ச ஊழல் குறைவான நாடுகள் பட்டியலில் உள்ளது.

கரப்ஷன் வாட்ச்டாக் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற ஊழல் கண்காணிப்பு அமைப்பு நடப்பாண்டில் ஜூன் 17 முதல் ஜூலை 17 வரை இந்தியர்கள் 2,000 பேரிடம் நடத்திய ஆய்வில் அடிப்படையில் இந்த தகவல் தெரிய வந்தது.

இந்தியர்களில் 50 சதவீதம் பேர், அதிகாரிகளின் வற்புறுத்தலின் பேரில் லஞ்சம் கொடுக்கப்பதாகவும், 32 சதவீதம் பேர் சேவையைப் பெற லஞ்சம் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என கூறியுள்ளனர்.

மேலும், இந்தியாவில் மக்களுக்கான பொதுசேவைகளை பெற 46 சதவீதம் பேர் தரகர்களை அணுகி பயன் பெறுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. லஞ்சத்தைத் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சி எடுத்தும் எந்த பயனும் இல்லை என்றும் அரசு-பொதுமக்கள் இடையே சுமூகமான உறவு ஏற்பட வழிவகை செய்ய வேண்டும் எனவும் பலரும் கருத்து தெரிவித்திருந்தார்கள்.

17 நாடுகளில் ஐந்து குடிமக்களில் ஒருவர் சுகாதார அல்லது கல்வி போன்ற முக்கிய அரசு சேவைகளை அணுக லஞ்சம் கொடுப்பதும் தெரிய வந்துள்ளது.

கணக்கெடுக்கப்பட்ட 17 நாடுகளில் இந்தியாவுக்குப் பிறகு அதிக லஞ்சம் பெறும் நாடுகளின் பட்டியலில் கம்போடியா 37 சதவீதம் பேர் லஞ்சம் கொடுப்பதாகவும், இந்தோனேசியாவில் 30 சதவீதம் பெற் லஞ்சம் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

குறைவாக லஞ்சம் பெறும் நாடுகளாக ஜப்பான், மாலத்தீவு ஆகியவை உள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments