மும்பை தாக்குதலைப் போல் மீண்டும் மற்றொரு தாக்குதல் நிகழ வாய்ப்பில்லை- அமைச்சர் ராஜ்நாத் சிங்

0 658
மும்பை தாக்குதலைப் போல் மீண்டும் மற்றொரு தாக்குதல் நிகழ வாய்ப்பில்லை- அமைச்சர் ராஜ்நாத் சிங்

2008ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலைப் போல், மீண்டும் தாக்குதல் நிகழ வாய்ப்பில்லை எனப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், நாட்டின் தன்மானம், இறையாண்மை, மண்டல ஒருமைப்பாடு ஆகியவற்றில் அரசு எந்த இணக்கமும் செய்துகொள்ளாது எனத் தெரிவித்தார். பயங்கரவாதத்தின் எளிதான இலக்காக இந்தியா இருக்காது என்றும், பயங்கரவாதத்தின் நாற்றங்காலாகப் பாகிஸ்தான் திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில ஆண்டுகளாகத் தேசியப் பாதுகாப்புக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் மும்பை தாக்குதலைப் போன்று மற்றொரு தாக்குதல் நிகழ வாய்ப்பில்லை என்றும் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments