மிக்-29 கே பயிற்சி விமானம் அரபிக் கடலில் விழுந்து விபத்து

0 3710
மிக்-29 கே பயிற்சி விமானம் அரபிக் கடலில் விழுந்து விபத்து

மிக்-29 கே பயிற்சி ஜெட் விமானம் ஒன்று அரபிக் கடலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.

40க்கும் மேற்பட்ட மிக்-29 கே விமானங்களை, இந்திய கடற்படை இயக்கி வருகிறது. அதில் ஒரு பயிற்சி விமானம், நேற்று மாலை 5 மணியளவில் அரபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை தொடர்ந்து நடைபெற்ற தேடுதல் வேட்டையில் ஒரு விமானி மீட்கப்பட்டார்.

விமானத்தில் பயணித்த இன்னொரு விமானியை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது. கடந்த ஓராண்டில் மிக்-29 கே விமானம் விபத்தில் சிக்குவது இது 3ஆவது முறையாகும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம், கடந்த பிப்ரவரி மாதமும் 2 விமானங்கள் விபத்தில் சிக்கின. எனினும் அதில் பயணித்த விமானிகள் பாதுகாப்பு சாதனத்தை இயக்கி உயிர் தப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments