சட்டிஸ்கரில் கிராமத்தில் புகுந்த ”யானைகள் கூட்டம்” நான்கு வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கி அட்டகாசம்

சட்டிஸ்கரில் கிராமத்தில் புகுந்த ”யானைகள் கூட்டம்” நான்கு வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கி அட்டகாசம்
சட்டிஸ்கர் மாநிலம் பல்ராம்புரில் காட்டு யானைகள் கூட்டம் ஒன்று கிராமத்தில் புகுந்தது.
வாத்ராப்நகர் வனப்பகுதியில் இருந்து வந்த இந்த யானைக்கூட்டம் கிராமத்தில் உணவைத் தேடி புகுந்து அட்டகாசம் செய்தது. அங்கிருந்த நான்கு வீடுகளை யானைகள் இடித்துத் தரைமட்டமாக்கின.
அவற்றை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே இன்னொரு யானைக்கூட்டமும் புகுந்ததால் 40 யானைகள் அங்கு நடமாடுகின்றன.
Comments