தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

0 27746
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நிவர் புயல் வலுவிழந்துள்ள நிலையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிவர் தற்போது மேலும் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதாகவும், இதனால் வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை,திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments