இரண்டு நாள் சுற்றுப்பயணமாக காட்மண்டு சென்ற சிருங்காலா, நேபாள பிரதமர் சர்மா ஒலி, அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை

0 647
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக காட்மண்டு சென்ற சிருங்காலா, நேபாள பிரதமர் சர்மா ஒலி, அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை

நேபாளத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளியுறவுச் செயலர் சிருங்காலா காட்மண்டுவில் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி , அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பிரதீப் கியாவலி ஆகியோரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

நேபாளத்துடன் நிலவும் எல்லைப் பிரச்சினை குறித்து இந்த சந்திப்பு மூலம் சுமுகத்தீர்வு காண இந்தியா வெளியுறவுச் செயலரை அனுப்பி வைத்துள்ளது. நேபாளம் வெளியிட்ட புதிய வரைபடத்தில் காலாபனியை தனது நாட்டின் எல்லைக்குட்பட்ட பகுதியாக நேபாளம் தெரிவித்ததையடுத்து இருநாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments