வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவது எப்போது?- டிரம்ப் பதில்

தேர்தல் தோல்வியை அதிபர் டிரம்ப் இதுவரை ஏற்காத நிலையில், தேர்வாளர்கள் குழு வாக்கெடுப்பில் ஜோ பைடன் வெற்றி பெற்றால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவதாகத் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு 306 தேர்வுக்குழு வாக்குகளும், டிரம்ப்பிற்கு 232 வாக்குகளும் கிடைத்துள்ளது. இந்நிலையில், தேர்வாளர் குழு எதிராக வாக்களித்தால், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவீர்களா என்று கேட்டதற்கு டிரம்ப் நிச்சயமாக என்று பதிலளித்தார்.
புதிய அதிபர் யார் என்பதை முடிவு செய்வதற்காக, டிசம்பர் 14ம் தேதி எலக்டரல் காலேஜ் எனப்படும் தேர்வாளர்கள்குழு கூடி வாக்களிக்க உள்ளனர்.
Donald Trump has said that he 'certainly will' leave the White House if the Electoral College votes for President-elect Joe Biden. The voting happens in December https://t.co/hwj9iphjLy pic.twitter.com/CVgZjjbL3M
— Reuters (@Reuters) November 27, 2020
Comments