செங்கல்பட்டு, காஞ்சி மாவட்டங்களில் 358 ஏரிகள் முழுவதும் நிரம்பின

செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த இருநாட்களில் பெய்த கனமழையால் 358 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.
நிவர் புயலின் தாக்கத்தால் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த இருநாட்களாகக் கனமழை பொழிந்தது. இதனால் இரு மாவட்டங்களிலும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 358 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. 294 ஏரிகள் முக்கால் பங்குக் கொள்ளளவை எட்டியுள்ளன. திருப்பெரும்புதூர் அருகே உள்ள பிள்ளைப் பாக்கம் ஏரி முழுவதும் நிரம்பியதால் மறுகால் பாய்ந்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டாரத்தில் மொத்தமுள்ள 108 ஏரிகளில் 12 ஏரிகள் மட்டுமே முழுவதும் நிரம்பியுள்ளன. மேலும் 50 ஏரிகள் 90 விழுக்காடு கொள்ளளவை எட்டியுள்ளன. பெரிய ஏரிகளில் ஒன்றான தையூர் ஏரி முழுவதும் நிரம்பியதால் மறுகால் வழியாக உபரிநீர் வெள்ளமாகப் பாய்ந்து வருகிறது.
Comments