நிவர் புயலை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு 28-ஆம் தேதி வரை விடுமுறை

0 1638
நிவர் புயலை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு 28-ஆம் தேதி வரை விடுமுறை

நிவர் புயலை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் வரும் 28ந்தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

நிவர் புயலால் புதுச்சேரி, காரைக்காலில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனையடுத்து, இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.

எனினும், புயலை தொடர்ந்து பெய்து வரும் மழை, வீடுகள் மற்றும் கட்டிடங்களை சூழ்ந்து காணப்படும் வெள்ள நீர், மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வரும் 28ந்தேதி வரை விடுமுறையை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே புதுச்சேரியில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments