சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் நிவர் புயலால் தமிழகத்திற்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை - முதலமைச்சர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர் சந்திப்பு
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முழுமையான அறிவுரைகள் மாவட்ட நிர்வாகங்களுக்கு வழங்கப்பட்டன
சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் நிவர் புயலால் தமிழகத்திற்கு பெரிய அளவில் எந்த பாதப்பும் இல்லை
நிவாரண முகாம்களில் 13 லட்சம் பேர் தங்க வைக்கும் அளவிற்கு திட்டமிட்டு இருந்தோம்
கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 77 மின்கம்பங்களும் சரி செய்யப்பட்டு தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை
நிவர் புயலால் கடலூர் மாவட்டத்தில் 35 ஹெக்டேர் பரப்பளவில் வாழைகள் சேதமடைந்துள்ளன
முழுமையான சேதம் குறித்து மாவட்ட நிர்வாகம் கணக்கெடுத்த பின்பு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும்
நிவர் புயலால் கடலூர் மாவட்டத்தில் 321 மரங்கள் விழுந்தன. அவை அனைத்தும் அகற்றப்பட்டு விட்டன.
கடலூரில் 52,223 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்
காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு பேரிடர் நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்படும்
உயிர் சேதத்தை தவிர்ப்பதற்காகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டது
நிவர் புயலை எதிர்கொள்ள சரியான முறையில் நடவடிக்கை எடுத்த காரணத்தினால் உயிர் சேதம், பொருள் சேதம் குறைந்துள்ளது
Comments