டெல்லி நோக்கி டிராக்டரில் சென்ற விவசாயிகள் அரியானா எல்லையில் தடுத்து நிறுத்தம்...சோதனைச் சாவடியில் வாகனங்கள் அணிவகுத்ததால் போக்குவரத்து நெரிசல்

0 687
டெல்லி நோக்கி டிராக்டரில் சென்ற விவசாயிகள் அரியானா எல்லையில் தடுத்து நிறுத்தம்...சோதனைச் சாவடியில் வாகனங்கள் அணிவகுத்ததால் போக்குவரத்து நெரிசல்

டெல்லிக்குச் செல்லும் அனைத்து வாகனங்களையும் காவல்துறையினர் தீவிரச் சோதனைக்குப் பின்னரே அனுப்புவதால் அரியானா - டெல்லி எல்லையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன.

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரிப் பஞ்சாப், அரியானா விவசாயிகள் டெல்லியை முற்றுகையிடும் போராட்டம் நடத்த விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

பஞ்சாபில் இருந்து டிராக்டர்களில் வந்த விவசாயிகளை அரியானா காவல்துறையினர் அம்பாலாவில் தடுத்து நிறுத்தினர். தடுப்புகளை எடுத்தெறிந்து முன்னேறிச் செல்ல முயன்ற விவசாயிகள் மீது காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சி விரட்டியடித்தனர்.

அரியானா எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் பேருந்துகள், கார்களைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர், அவற்றில் விவசாயிகள் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னரே உள்ளே அனுப்பினர். இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments