வேலூரில் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்த மழை நீர்..

வேலூர் அருகே கன்சால்பேட்டையில் குடியிருப்புப் பகுதிகளில் நீர் புகுந்ததால் பொதுமக்கள் இன்னலுக்கு உள்ளாகினர்.
வேலூர் அருகே கன்சால்பேட்டையில் குடியிருப்புப் பகுதிகளில் நீர் புகுந்ததால் பொதுமக்கள் இன்னலுக்கு உள்ளாகினர்.
புதுச்சேரி அருகே கரையைக் கடந்த நிவர் புயல் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்கள் வழியாக ஆந்திர மாநிலம் நோக்கி நகர்ந்து வருகிறது.
இதனால் வேலூர் மாவட்டத்தில் கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்துப் பாய்ந்தது. வேலூர் கன்சால்பேட்டை, திடீர் நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அருகில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Comments