உணவு கிடைக்காமல் குப்பையில் மேயும் யானைகள் - இலங்கையில் துயரமான சம்பவம்!

0 6069
குப்பை மேட்டில் மேயும் யானைகள்

லங்கையில், தம் வாழ்விடங்களை இழந்துள்ள காட்டு யானைகள் உணவு கிடைக்காமல், பன்றிகள் போல குப்பைமேட்டுக்குப் படையெடுத்து அழுக்குகள், பாலித்தீன் பைகளை சாப்பிட்டு வருகின்றன. 

இலங்கையில் சுமார் 7,500 யானைகள் காடுகளில் வசிக்கின்றன. இலங்கையில் சமீபகாலமாக வன அழிப்பு நடவடிக்கைகள் அதிகமாகியுள்ளதால், காட்டு யானைகள் தமது வாழ்விடங்களை இழந்து உணவு கிடைக்காமல் திரிகின்றன.

image

இலங்கையில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் சேகரிக்கப்படும் 125 முதல் 150 டன் வரையிலான குப்பைகள் அஷ்ரப் நகரில் அமைக்கப்பட்டுள்ள குப்பை மேட்டில் கொட்டப்படுகின்றன. வனத்தில் உணவு கிடைக்காத யானைகள் குப்பை மேட்டைக் கிளறி, அழுகிய காய்கறிகளுடன் ஆபத்து நிறைந்த பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் ஆகியவற்றையும் உண்பது காண்பாரை வேதனையடைய செய்வதாக உள்ளது.

குப்பைக் மேட்டில்  யானைகள் சாப்பிடும் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடித் துகள்கள் அவற்றுக்கு எமனாக மாறிவருகின்றன. அதனால், யானைகள் நோய்வாய்ப்பட்டு அதிகளவில் மடிந்து வருகின்றன. இலங்கையில், 2019 ம் ஆண்டில் மட்டும் 361 யானைகள் உயிரிழந்துள்ளன.

இதற்கு முன்பு குப்பைக் கிடங்கைச் சுற்றி மின்சார வேலிகள் அமைக்கப்பட்டன. ஆனால், யானைகள் அந்த வேலிகளை எளிதாக சேதப்படுத்தி உள்ளே வந்துவிட்டன. இதனால், தற்போது குப்பை மேட்டை சுற்றி அகழிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அகழிகளை தாண்டி யானைகள் குப்பை மேடுகளுக்கு செல்லாது என்று மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments