ஆந்திராவில் வாகன சோதனையில் சிக்கிய 1கோடியே 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம்

0 1347
ஆந்திரமாநிலம் கடப்பாவில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 1கோடியே 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆந்திரமாநிலம் கடப்பாவில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 1கோடியே 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

செம்மரக் கடத்தலைத் தடுப்பதற்காக வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், பத்வேல் பகுதியிலிருந்து வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில்  இருந்த  1 கோடியே 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் குறித்து விசாரித்தவர்கள், உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் பணத்தைக் கைப்பற்றியதோடு, காரிலிருந்த கர்நாடக மாநிலம் தேவனகிரி பகுதியை சேர்ந்த வீரேஸ், மாரிகவுடா ஆகியோரைக் கைது செய்தனர்.

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக கடப்பா மாவட்ட கூடுதல் எஸ்.பி. தேவபிரசாத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments