நிவர் புயலால் நிற்காத மழை

0 2044
நிவர் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது

நிவர் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.

நிவர் புயல் கரையைக் கடந்த போது விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் அதிகனமழை பெய்தது. செஞ்சி, மேல்மலையனூர், நாட்டார்மங்கலம், சத்தியமங்கலம் போன்ற பகுதிகளில் இரவு 12 மணி முதல் பலத்த காற்றுடன் அதிகனமழை பதிவானது. 

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், தாமல், மாகரல், செவிலிமேடு, உள்ளிட்ட பகுதிகளில் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

மழை தீவிரம் காரணமாக ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதாலும், காற்றின் வேகத்தாலும் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments