நிவர் புயல் முழுமையாக கரையைக் கடந்தது..!

0 39414
நிவர் புயல் முழுமையாக கரையைக் கடந்தது

அதிகாலை -4.00 மணி நிலவரப்படி:

நிவர் புயல் முழுமையாக கரையை கடந்தது

நிவர் வலுவிழந்து தீவிரப்புயலாக நிலப்பகுதியில் இருக்கிறது

அடுத்த சில மணி நேரங்களில் தீவிர நிவர் புயல் வலுவிழந்து புயலாக மாறும்

நிவர் புயல் கரையை கடந்தாலும் தமிழக நிலப்பகுதியில் தான் உள்ளது

நேற்று இரவு 11.30க்கும் இன்று அதிகாலை 2.30க்கும் இடைப்பட்ட காலத்தில் நிவர் கரையை கடந்துள்ளது

புதுச்சேரி அருகே நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை நிவர் புயல் கரையை கடந்தது

அதிகாலை -3.45 மணி நிலவரப்படி:

நிவர் புயலின் மையப்பகுதி கரையைக் கடந்தது: இந்திய வானிலை ஆய்வு மையம்

அதிதீவிர புயலாக இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரையில் கடந்துள்ளது

நிவர் புயலின் மையப்பகுதி கரையைக் கடந்துள்ளது: இந்திய வானிலை ஆய்வு மையம்

நிவர் புயலின் மையப்பகுதி கரையை கடக்க 3 மணி நேரம் எடுத்துக் கொண்டுள்ளது: இந்திய வானிலை ஆய்வு மையம்

நிவர் புயலின் மையப்பகுதி நீங்கலான எஞ்சிய பகுதிகள், வலுவிழந்த நிலையில் கரையை கடந்து வருகிறது

அதிதீவிர புயலாக இருந்த நிவர் புயல் தீவிர புயலாக வலுவிழந்த நிலையில், கரையை கடந்து வருகிறது

நிவர் புயல் தீவிர புயலாக வலுவிழந்த நிலையில், மையப்பகுதி கரையை கடந்துவிட்டதாக அறிவிப்பு

நிவர் புயலின் மையப்பகுதி கரையை கடந்துவிட்டதாக அறிவிப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

அதிகாலை -3.20 மணி நிலவரப்படி:

நிவர் புயல் தீவிர புயலாக வலுவிழந்தது

நிவர் புயல் கரையை கடந்து வரும் நிலையில், தீவிர புயலாக வலுவிழந்துள்ளது

அதிதீவிர புயலாக இருந்த நிவர் புயல், தற்போது, தீவிர புயலாக வலுவிழந்துள்ளது

தீவிர புயலாக வலுவிழந்த நிலையில், நிவர் புயல் கரையை கடந்து வருகிறது

நள்ளிரவு 1.30 மணி நிலவரப்படி, புதுச்சேரிக்கு 20 கி.மீ கிழக்கே, நிவர் புயல் சுற்றுப்பகுதி உள்ளது

சென்னைக்கு தெற்கு, 100 கிலோ மீட்டர் தொலைவில், நிவர் புயல் உள்ளது

இரவு-2.40 மணி நிலவரப்படி:

நிவர் புயல் கரையை கடந்து செல்ல 3 முதல் 4 மணி நேரம் வரையில் ஆகலாம்

நிவர் புயல் புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட இடங்களில் கரையை கடந்து வருகிறது

நிவர் புயலின் மையப்பகுதி புதுச்சேரி கடற்கரை பகுதியில் கரையேறி வருகிறது

புதுச்சேரியில் கரை கடந்து வரும் நிவர் புயலின் மையப்பகுதி, இதுவரை 25% கடந்துள்ளது

இரவு-2.20 மணி நிலவரப்படி:

நிவர் புயல் மையப்பகுதி 25% கடந்தது

புதுச்சேரி கடற்கரை பகுதியில், நிவர் புயலின் மையப் பகுதி 25% கரையை கடந்துள்ளது

நிவர் புயலின் எஞ்சியுள்ள பகுதிகள் படிப்படியாக கரையை கடந்து வருகிறது

புதுச்சேரியில் நிவர் புயல், மணிக்கு 120 முதல் 130 கி.மீ வேக காற்றோடு கரையை கடக்கிறது

புதுச்சேரியில் நிவர் புயல் கரையேறும் ஒரு சில பகுதிகளில் மணிக்கு 145 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று

புதுச்சேரிய கடற்கரை பகுதியில், நிவர் புயலின் மையப்பகுதி, மணிக்கு 16 கி.மீ வேகத்தில் கடந்து வருகிறது

இரவு-2.00 மணி நிலவரப்படி:

நிவர் புயலின் மையப்பகுதி அடுத்த 2மணி நேரத்தில் கரையை கடக்கும்

புதுச்சேரி அருகே நிவர் புயலின் மையப்பகுதி கரையை கடந்து வருகிறது

மணிக்கு 120-130 கி.மீ வேகத்தில் புயல் கரையை கடக்கும் பகுதிகளில் பலத்த காற்று

புயல் கரையை கடக்கும் இடங்களில் காற்றின் வேகம் மணிக்கு 145கி.மீ ஆக அதிகரிக்கும்

மணிக்கு 16கிமீ வேகத்தில் நிவர் புயல் கரையை கடந்து வருகிறது

இரவு-1.00 மணி நிலவரப்படி:

செம்பரம்பாக்கம் ஏரி : நீர்திறப்பு குறைப்பு

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர்த்திறப்பு 2,000 கனஅடி குறைக்கப்பட்டுள்ளது

இரவு-12.45 மணி நிலவரப்படி:

நிவர் புயலின் மையப்பகுதி கரையை கடந்து கொண்டிருக்கிறது

நிவர் புயலின் மையப்பகுதி அடுத்த 1 - 2 மணி நேரத்தில் கரையை கடக்கும்

புதுச்சேரிக்கு அருகே நிவர் புயலின் மையப்பகுதி கரையை கடந்து கொண்டிருக்கிறது

அதி தீவிர புயலாக நிவர் கரையை கடந்து கொண்டிருக்கிறது

புயல் கரையை கடந்து கொண்டிருக்கும் நிலையில் காற்றின் வேகம் 130கிமீ வரை அதிகரிப்பு

இரவு-12.00 மணி நிலவரப்படி:

கடலூரில் நிவர் புயல் காரணமாக பலத்த சூறை காற்று - கனமழை

கடலூரில் அதி தீவிர கனமழை கொட்டித் தீர்க்கிறது

இரவு-12.30 மணி நிலவரப்படி:

நிவர் புயல் கரையை கடந்து வரும் நிலையில் சென்னையில் பலத்த காற்று

கடந்த சில மணி நேரங்களாக சென்னையில் மழை இல்லை - பலத்த காற்று மட்டுமே வீசுகிறது

இரவு-11.45 மணி நிலவரப்படி:

நிவர் புயலின் மையப்பகுதி கரையை நெருங்கி வருகிறது

நிவர் புயலின் வெளிப்புறம் முழுவதுமாக கரையை தொட்டது

புயலின் மையப்பகுதி கரையை முழுவதுமாக கடக்க 3மணி நேரம் ஆகும்

மணிக்கு 16 கிமீ வேகத்தில் புயல் கரையை கடந்து கொண்டிருக்கிறது

புயல் கரையை கடந்து வரும் நிலையில் புதுச்சேரி, கடலூர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை

அடுத்த 3 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழை கொட்டித் தீர்க்கும்

அரியலூர், கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடிமின்னலுடன் கனமழை பெய்யும்

கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடிமின்னலுடன் கனமழை பெய்யும்

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கனமழை பெய்யும்

பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 3மணி நேரத்திற்கு மழை பெய்யும்

தஞ்சை, திருவாரூர், திருவள்ளூர் மாவட்டங்களிலும் 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும்

3மணி நேரத்திற்கு வேலூர், செங்கல்பட்டு மற்றும் சென்னையிலும் மழை பெய்யும்

இரவு-11.30 மணி நிலவரப்படி:

புயல் கரையை கடந்து வரும் நிலையில் கடலூரில் பலத்த காற்றுடன் கனமழை

கடலூரில் புயல் கரையை கடந்து வரும் நேரடி காட்சி

புதுச்சேரி - மரக்காணம் இடையே புயலின் முக்கிய பகுதி கரையை கடக்கிறது

புதுச்சேரியில் இருந்து வடக்கே 30கிமீ தொலைவில் புயல் கரையை கடக்கத் தொடங்கியது

அதிதீவிர புயலாக நிவர் கரையை கடக்கத் தொடங்கியது

கடலூரில் நிவர் புயல் காரணமாக பலத்த சூறை காற்று - கனமழை

கடலூரில் அதி தீவிர கனமழை கொட்டித் தீர்க்கிறது

இரவு-11மணி நிலவரப்படி:

கரையை கடக்கத் தொடங்கியது நிவர்

நிவர் புயல் கரையை கடக்கத் தொடங்கியது

கடலூர் பகுதியில் பலத்த காற்றுடன் புயல் கரையை தொட்டது

புயலின் வெளிப்புறம் கடலூர் மாவட்ட கடற்பகுதியை தொட்டது

நிவர் புயல் கரையை கடக்கும் நிகழ்வு துவங்கியது

அதிகாலை 3மணி வரை நிவர் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்ப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments