வைரங்கள், படிகங்கள் மற்றும் முத்துக்கள் பொறிக்கப்பட்ட விலை உயர்ந்த சொகுசு முகக்கவசம்...!

0 1313

உலகம் முழுவதும் முகக்கவசம் அணியாத முகங்களே இல்லை என்ற நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.

இந்த கொடிய வைரஸ் கொரோனா பரவுவதைத் தடுப்பதில் முக்கிய பங்காக சானிடிசர்கள், கையுறைகள் மற்றும் முகக்கவசங்கள் கொண்டுள்ளது.

அவ்வாறு ஜப்பான் நிறுவனம் ஒன்று மிக விலை உயர்ந்த சொகுசு முகக்கவசங்களை தயாரித்துள்ளது. அதாவது உயர்தர மக்களால் மட்டுமே இந்த முக கவசம் வாங்க முடியும். ஏனென்றால் அதன் விலை இந்திய ரூபாய் மதிப்பில்சுமார் 80 லட்சம் ஆகும்.

கொரோனா பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் கிட்டத்தட்ட அனைத்து துறைகளும் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளன. குறிப்பாக பேஷன் இன்டஸ்ட்ரீஸ், நகை மற்றும் ஜவுளித் துறையில் மிகக் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. அவற்றை ஊக்குவிக்கும் விதமாக இந்த விலை உயர்ந்த சொகுசு முக கவசங்களை தனியார் நிறுவனம் ஒன்று தயாரித்து உள்ளதாக கூறி உள்ளது.

கொரோனா ஊரடங்கு, பொருளாதார இழப்பு, வருமான இழப்பு உள்ளிட்ட பல காரணங்கல் சூழ்ந்துள்ள நிலையில், மக்கள் இந்த முகக் கவசங்கள் அணிவது ஒரு உற்சாகம் ஏற்படுமாம். இதில் புதியதாக 0.7 கேரட் வைரங்கள், 300க்கும் மேற்பட்ட ஸ்வரோவ்ஸ்கி படிகங்கள் மற்றும் ஜப்பானிய வளர்ப்பு முத்துக்களான அகோயா முத்துக்கள் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன.

இது தவிர 800க்கும் மேற்பட்ட வகையிலான பல்வேறு முக கவசங்களையும் இந்த நிறுவனம் தயாரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments