சென்னை விமான நிலையம் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை மூடல்

0 3165
சென்னை விமான நிலையம் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை மூடல்

சென்னையில், விமான நிலையம், இன்று இரவு 7 மணி முதல், நாளை வியாழக்கிழமை காலை 7 மணி வரையில், 12 மணி நேரத்திற்கு மூடப்பட்டது.

நிவர் புயல் கரையேறும் சமயங்களில், அதிவேகத்தில் பலத்த காற்று வீசுவதோடு, கனமழை முதல் அதி கனமழை வரையில் மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையிலிருந்து, இயக்கப்படும், மற்றும் வெளியூர்களிலிருந்து வரும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், இன்று புதன்கிழமை இரவு 7 மணி முதல் நாளை வியாழக்கிழமை காலை 7 மணி வரையில், சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயலின் தீவிரத்தை கவனத்தில் கொண்டும், பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், 12 மணி நேரத்திற்கு, சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக, அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments