செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு - சென்னையை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

0 2888
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு - சென்னையை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டிருப்பதன் காரணமாகவும், சென்னையின் அண்டை மாவட்டங்களில் உள்ள ஏரிகள் நிரம்பியதன் காரணமாகவும், 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், நந்திவரம், மண்ணிவாக்கம், மணிமங்கலம், ஊரப்பாக்கம், ஆதனூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் உள்ள ஏரிகள் நிரம்பிய நிலையில், அவற்றிற்கு வரும் தண்ணீர், அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.

மேலும், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம், முடிச்சூர், பெருங்களத்தூர், மேற்குத் தாம்பரம், திருநீர்மலை, பொழிச்சலூர், அனகாபுத்தூர், பம்மல், சென்னை விமான நிலையம், அடையாறு ஆற்றின் வலது மற்றும் இடது கரையோர பகுதிகளுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments