சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஏழை எளிய மக்களுக்கு உணவுப் பொட்டலங்களையும் வழங்கினார்.
சென்னையில் இரு நாட்களாகக் கனமழை பெய்து வரும் நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர், திரு.வி.க. நகர், வில்லிவாக்கம், எழும்பூர் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதைப் பார்வையிட்ட அவர், அதை அப்புறப்படுத்தும்படி மாநகராட்சி ஊழியர்களைக் கேட்டுக்கொண்டார்.
திருவிக நகர் காந்தி நகரில் ஏழை எளிய மக்களுக்கு உணவுப் பொருட்களையும் வழங்கினார்.
Comments