திருவள்ளூர் மாவட்ட 5 முக்கிய ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

0 8601
திருவள்ளூர் மாவட்ட 5 முக்கிய ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நிவர் புயலின் தாக்கத்தால் திருவள்ளூர் மாவட்டத்தில் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் தேர்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து, மொத்த நீர் இருப்பு 7.67 டிஎம்சியாக உயர்ந்துள்ளது.

3 300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2503 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 3231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 1841 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்குன்றத்தில் 10 சென்டி மீட்டரும், பூவிருந்தவல்லயில் 9.7 சென்டி மீட்டரும், சோழவரத்தில் 8.7 சென்டி மீட்டரும் மழை பதிவானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments