நிவர் புயல் முன்னெச்சரிக்கைப் பணிகளை வெள்ளத்தடுப்பு அதிகாரி ககன்தீப்சிங்பேடி ஆய்வு

நிவர் புயல் முன்னெச்சரிக்கைப் பணிகளை வெள்ளத்தடுப்பு அதிகாரி ககன்தீப்சிங்பேடி ஆய்வு
கடலூர் மாவட்ட கடற்கரையோரப் பகுதிகளில் நிவர் புயல் தொடர்பான முன்னெச்சரிக்கைப் பணிகளை மாவட்ட வெள்ளத்தடுப்பு சிறப்பு அதிகாரியும், வேளாண் உற்பத்தி ஆணையருமான ககன்தீப்சிங் பேடி, மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமுரி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பரங்கிப்பேட்டை, முடசல் ஓடை, சாமியார்பேட்டை உள்ளிட்ட மீனவக் கிராமங்களில் மீனவர்களின் படகுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதையும், புயல்பாதுகாப்பு மையங்களையும் அவர்கள் பார்வையிட்டனர்.
தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் இருப்பவர்களும் குடிசைகளில் வசிப்பவர்களும் பாதுகாப்பு மையங்களில் சென்று தங்க கேட்டுக் கொண்டனர்.
Comments