காவல் நிலையங்களில் சிசிடிவி காட்சிகளின் பதிவுகளை 45 நாட்களுக்கு குறையாமல் பாதுகாக்க வேண்டும்- உச்சநீதிமன்றம்

0 1120
காவல் நிலையங்களில் சிசிடிவி காட்சிகளின் பதிவுகளை 45 நாட்களுக்கு குறையாமல் பாதுகாக்கப்படவேண்டும்- உச்சநீதிமன்றம்

காவல் நிலையங்களில் வைக்கப்படும் சிசிடிவி காட்சிகளின் பதிவுகள் 45 நாட்களுக்கு குறையாமல் பாதுகாக்கப்படவேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்காக சிசிடிவி கேமராக்கள் அமைப்பது குறித்து வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.எப். நாரிமன், கே.எம். ஜோசப் மற்றும் அனிருத்த போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது சிசிடிவி தொடர்பாக தேவையான உத்தரவுகளை தாங்கள் பிறப்பிக்க இருப்பதாகக் கூறிய நீதிபதிகள், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மொத்த காவல் நிலையங்கள் அவற்றில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி குறித்த விபரங்களை பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்ய அட்டர்னி ஜெனரலுக்கு உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments