முழு கொள்ளளவை நோக்கி "செம்பரம்பாக்கம் ஏரி" ; நீர்மட்டம் 21.55 அடியாக அதிகரிப்பு..!

முழு கொள்ளளவை நோக்கி "செம்பரம்பாக்கம் ஏரி" ; நீர்மட்டம் 21.55 அடியாக அதிகரிப்பு..!
நிவர் புயல் காரணமாக நேற்று முதல் பலத்த மழை பெய்து வரும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக முழு கொள்ளளவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஆனாலும், ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்களில் அதிக அளவு மழை பெய்யாததால் நீர்வரத்து குறைந்தே உள்ளது.
இதனால் முழு கொள்ளளவை எட்டுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. உச்சநீர்மட்டம் 24 அடி என்கின்ற நிலையில் காலை நிலவரப்படி நீர்மட்டம் 21புள்ளி 55 அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 1096 கன அடியாக உள்ள நிலையில், தற்போது மொத்த கொள்ளளவு 2999 மில்லியன் கன அடியாக உள்ளது.
Comments