அயோத்தியில் உள்ள விமானநிலையத்திற்கு "ஸ்ரீராமர்" பெயர்

0 4020
அயோத்தியில் உள்ள விமானநிலையத்திற்கு "ஸ்ரீராமர்" பெயர்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள விமான நிலையத்திற்கு ஸ்ரீராமரின் பெயரை வைக்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், அயோத்தியில் உள்ள விமானநிலையத்தின் பெயரை மரியாதா புருஷோத்தம் ஸ்ரீராம் என பெயர் மாற்றும் முடிவை அமைச்சரவை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதற்காக உத்தரப்பிரதேச சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விமானப் போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments