விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதிகளில், கடல் சீற்றம்...

விழுப்புரம் மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் கண்காணிப்புத் தீவிரம்
விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதியான மரக்காணத்தில், கடல் சீற்றமாக காணப்படுவதுடன் பேரலைகள் எழுகின்றன. பலத்த காற்றுடன், மழையும் பெய்து வரும் நிலையில், அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆய்வு செய்தார்.
அழகன்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மழை-வெள்ள மீட்பு முகாம்களையும் பார்வையிட்டார். மரக்காணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
Comments