திருவாரூரில் மீட்புப் பணிக்காக 1200 போலீசார் தயார் நிலை..!

திருவாரூரில் மீட்புப் பணிக்காக 1200 போலீசார் தயார் நிலை..!
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்வதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், மும்முரமாகியுள்ளன.
திருவாரூர் மாவட்டத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட, 1200 போலீசார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளுக்கான பிரத்யேக பயிற்சிகளை பெற்றுள்ள போலீசாரை சந்தித்த, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை, பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
திருத்துறைப்பூண்டியிலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவர் புயலை எதிர்கொள்வதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments