நிவர் புயல் கரைகடக்கும் காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மிதமான மழை

0 1224
நிவர் புயல் கரைகடக்கும் காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மிதமான மழையே பெய்கிறது

நிவர் புயல் கரையை நோக்கி நெருங்கி வரும் நிலையில், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மிதமான மழையே பெய்து வருகிறது.

நிவர் புயல் கரையைக் கடக்க உள்ள காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் தற்போது வரை மிதமான மழையே பெய்து வருகிறது. புதுச்சேரியில் நேற்று வரை விட்டு விட்டு பெய்த மழை, இன்று அதிகாலையில் இருந்து தொடர்ந்து பெய்து வருகிறது.

புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் படகுகளையும், மீன்பிடி உபகரணங்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தியுள்ளனர். வீடுகளுக்குள் நீர் தேங்குதல், மின்சாரம் துண்டிப்பு, மின்கம்பம் சாய்ந்தால் 0413 2243507 மற்றும் 508 என்ற அவசர உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பால், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்கள் தவிர வேறு எந்த வாகனமும் இயக்கப்படவில்லை. மேலும் கடற்கரைச் சாலை மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.

புயல் கரையைக் கடக்கும் வரை பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என புதுச்சேரி அரசு கேட்டுக் கொண்டுள்ளது. சாலைகளில் மரங்கள் விழுந்தால் குறிப்பிட்ட பகுதியில் உள்ள வட்டாட்சியர்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments