நிவர் புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய கனமழை.. சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர்..!

0 5455

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று முழுவதும் விட்டுவிட்டு பலத்த மழை பெய்த நிலையில், இரவிலும் மழை நீடித்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

நிவர் புயல் காரணமாக சென்னையில் நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இரவிலும் மழை நீடித்ததால் வடபழனி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியது.

இடைவிடாது மழை பெய்ததால், தியாகராயநகர் பேருந்து நிலையம் மற்றும் போக்குவரத்துப் பணிமனையில் தண்ணீர் தேங்கி நின்றது..

கேகே நகர் ஆர் கே சண்முகம் சாலை குடியிருப்பு பகுதியை மழைநீர் சூழ்ந்ததால், அப்பகுதியில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவதிக்குள்ளாயினர்.

எழும்பூர் நீதிமன்றம் அருகே இருந்த மரம் ஒன்று காற்றின் வேகத்தில் வேரோடு சாய்ந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு போலீசார் மற்றும் காவல் துறையினர் நள்ளிரவில் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.d

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY