நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் பேருந்து, ரயில், விமான போக்குவரத்து நிறுத்தம்

0 13173
நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் பேருந்து, ரயில், விமான போக்குவரத்து நிறுத்தம்

நிவர் புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கான பேருந்து, ரயில் மற்றும் விமான சேவைகள் இன்று நிறுத்தப்பட்டுள்ளன. 

நிவர் புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து 7 மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சேவை நேற்று பிற்பகல் முதல் நிறுத்தப்பட்டது. இதனால் கடலூர், புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்றும் பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் செல்லும் அனைத்து ரயில்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. இரு மார்க்கங்களிலும் 24 ரயில்கள் இயங்காது என்பதால், முன்பதிவு செய்த பயணிகளுக்கான கட்டணத்தொகை திருப்பி செலுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை புறநகர் ரயில் சேவையும் இன்று காலை 10 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், சென்னை மெட்ரோ ரயில்கள் இன்று வழக்கம்போல் இயங்குகிறது. விடுமுறை நாள் அட்டவணைப்படி 10 நிமிடத்துக்கு ஒருமுறை என்ற விகிதத்தில் ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து திருச்சியிலிருந்து சென்னை, பெங்களூர், துபாய் செல்லும் 49 இண்டிகோ விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments