பாகிஸ்தானில் பாலியல் வழக்கில் சிக்குபவர்களுக்கு ஆண்மை நீக்கம் தண்டனை - இம்ரான்கான் ஒப்புதல்

பாகிஸ்தானில் பாலியல் வழக்கில் சிக்குபவர்களுக்கு ஆண்மை நீக்கம் தண்டனை - இம்ரான்கான் ஒப்புதல்
பாகிஸ்தானில் பலாத்கார வழக்கில் சிக்கும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனை சட்டத்திற்கு பிரதமர் இம்ரான்கான் ஒப்புதல் அளித்துள்ளார்.
இது குறித்து அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், பாலியல் குற்றவாளிகளுக்கு விரைவான, கடுமையான தண்டனை வழங்க கொள்கை அளவில் இம்ரான் ஒப்புதல் அளித்ததாக குறிப்பிட்டுள்ளது.
ஆண்மை நீக்க தண்டனை வழங்கப்படுவது தொடக்கமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள ஆளும் கட்சி செனட்டர் பைஸல் ஜாவித் கான், இதுதொடர்பாக விரைவில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும் என்றும் கூறியுள்ளார்.
Comments