நிவர் புயல் எச்சரிக்கையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தயார் நிலையில் 108 ஆம்புலன்ஸ்கள்

0 2142
நிவர் புயல் எச்சரிக்கையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தயார் நிலையில் 108 ஆம்புலன்ஸ்கள்- அமைச்சர் விஜயபாஸ்கர்

நிவர் புயல் எச்சரிக்கையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாகை, கடலூர், புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்களில் 465 அவசர ஊர்திகள் தயாராக உள்ளன என்றார். தேவை ஏற்படின் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து அவசர ஊர்திகளை அழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

108 அவசர தேவைக்கு 044-28888105, 7338895011 என்ற எண்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments