மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து தடுப்பூசி விநியோகம் நடத்தப்படும்- பிரதமர் மோடி

மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து தடுப்பூசி விநியோகம் நடத்தப்படும்- பிரதமர் மோடி
மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, அவற்றின் ஒருங்கிணைப்புடன் கொரோனா தடுப்பூசி விநியோகம் நடத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா கட்டுப்பாடு குறித்து மாநில முதலமைச்சர்களுடன் மோடி காணோலி வாயிலாக விவாதித்தார். மாநிலங்கள் கொரோனா தடுப்பூசி விநியோகத்திற்காக, மாவட்ட, ஒன்றிய அளவிலான வழிகாட்டல் குழுக்களையும், குளிர்பதன கிட்டங்கி வசதியையும் ஏற்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
உள்நாட்டு, வெளிநாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் மத்திய அரசு தொடர்பில் இருப்பதாக மோடி கூறினார். எந்த தடுப்பூசியை வாங்கினாலும், அதன் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே மக்களுக்கு அது போடப்படும் என மோடி உறுதி அளித்தார்.
Comments