கர்நாடகா வீர சைவ லிங்காயத் வாரியத்துக்கு ரூ. 500 கோடி நிதி - எடியூரப்பா அறிவிப்பு

0 1127

கர்நாடகா வீர சைவ லிங்காயத் வாரியத்துக்கு முதல்வர் எடியூரப்பா 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்


கர்நாடக மாநிலத்தில் கர்நாடக வீர சைவ மக்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளனர். அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் KVLC என்று அழைக்கப்படும் கர்நாடக வீர சைவ லிங்காயத் வாரியத்துக்கு 2013 கம்பெனிகள் சட்ட விதிப்படி ரூ,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது .

கர்நாடக முதல்வர் எடியூரப்பா,  வீர சைவ லிங்காயத் தலைவர்களும் மற்ற அமைச்சர்களும் கேட்டுக்கொண்ட படி, இந்த நிதி ஒதுக்கப்படுவதால், பிற்படுத்தப்பட்ட மக்கள் நலத்துறை இந்த நிதியின் மூலம் கல்வி, சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள கர்நாடக வீர சைவலிங்காயத் மக்களுக்கு பெரும் அளவில் உதவிகள் செய்ய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வீர சைவ லிங்காயத் முக்கியமாக வடக்கு கர்நாடகத்தில் அரசியல் பலம் பெற்ற சமூகமாக திகழ்கிறது. உதவி முதலமைச்சர் லஷ்மண் சவாடி மற்றும் பல மந்திரி சபை அமைசர்கள் இந்த சமூகத்தை சார்ந்தவர்கள் ஆவார்கள்.

இந்த  வாரியத்தின் கழகசங்கத்தின் பதிவு குறிப்பு மற்றும் சங்க அமைப்புகள் விதி ஆகியவற்றை தயாரித்து, மாநில அரசின் அனுமதி பெற்று மத்திய கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தில் பதிவு செய்யும் பொறுப்பு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் ஆணையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதே போல மராட்டிய மேம்பாட்டு வாரியத்துக்கு ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

கர்நாடக மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 17 சவீதம் உள்ள இந்த லிங்காயத் சமூகத்தில் இன்னும் பல மக்கள் மிகவும் ஏழ்மையிலும் கூலி வேலை செய்து வறுமையில் வாடுபவர்களாகவுமே உள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

எது எப்படியிருந்தாலும் , மராட்டிய மேம்பாட்டு வாரியம் அமைப்பது போன்ற முடிவுகள் மராத்தி பேசும் மக்கள் அதிகமாக உள்ள பெலகாவி மக்களவை தொகுதி,பசவக்கல்யாண் மற்றும் மாஸ்கி சட்டமன்ற தொகுதிகளில் வர இருக்கும் இடைத்தேர்தலை கருத்தில் கொண்டே எடுக்கப்பட்டதாக எதிர் கட்சிகள் கருதுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments