நிவர் புயல் காரணமாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து

நிவர் புயல் காரணமாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து
நிவர் புயல் காரணமாக சென்னையில் இருந்த தென் மாவட்டங்கள் செல்லும் அனைத்து ரயில்களும் நாளை ஒருநாள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு மார்க்கங்களில் இயக்கப்படும் 24 ரயில்களும் நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பயணிகளுக்கான கட்டணத்தொகை திருப்பி செலுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதனிடையே, சென்னை புறநகர் ரயில் சேவையும் நாளை காலை 10 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments