மக்கள் தீயணைப்பு துறையை எளிதில் அணுக ‘தீ’ செயலி அறிமுகம்..!

0 1410
மக்கள் தீயணைப்பு துறையை எளிதில் அணுக ‘தீ’ செயலி அறிமுகம்..!

தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை சார்பில் தீ என்ற பெயரில் அலைபேசி செயலி வெளியிடப்பட்டுள்ளது. இந்த செயலியின் வாயிலாக, அவசர காலங்களில், பாதிக்கப்பட்ட மக்கள் தீயணைப்புத் துறையை அணுகலாம், அழைத்த 10 வினாடிகளுக்குள் தீயணைப்பு நிலையங்கள் தொடர்பு கொள்ளப்பட்டு, மிக குறுகிய நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் தகுந்த உபகரணங்களுடன் வருவார்கள்.

இதற்காக தீ செயலியுடன் கூடிய 371 கைக்கணினிகள் அனைத்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்களுக்கும், சென்னையில் உள்ள தீக்கட்டுப்பாட்டு அறைக்கும் வழங்கப்பட்டுள்ளது.

தீ செயலியை அலைபேசியில் இலவசமாக பதிவிறக்கம் செய்து தீவிபத்து அல்லது இதர இடர்பாடுகள் வரும் போது தகவல் தர பொதுமக்கள் பயன்படுத்தலாம். அவசரகால உதவிக்கான இந்த செயலி இந்தியாவில் முதன்முதலாக தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments