தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என வாய்தவறிக் குறிப்பிட்ட திமுக நிர்வாகி

தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என வாய்தவறிக் குறிப்பிட்ட திமுக நிர்வாகி
அதிமுகவில் இருந்த பழைய நினைப்பில், தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என வாய்தவறி, திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், தேனி திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான தங்கதமிழ்செல்வன் அளித்த பேட்டி, வைரலாகி வருகிறது.
தேனி மாவட்டம் தேவாரத்தை அடுத்த பொட்டிபுரம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த தங்கதமிழ்செல்வன், உதயநிதியின் பயணம் வெற்றிகரமாக முடிவடையும் எனவும், திமுக படுதோல்வி அடையும் எனவும் கூறியதால் சுற்றியிருந்தவர்களும் செய்தியாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
சுதாரித்துக் கொண்ட தமிழ்செல்வன், அதிமுக படுதோல்வி அடையும் என திருத்திக் கொண்டார். தர்மசங்கடமான புன்னகையுடன், தயவுசெய்து மாத்திக்கங்கடா சாமிகளா என செய்தியாளர்களை பார்த்துக் கூறியபோது, அங்கு வெடிச்சிரிப்பு சத்தம் எழுந்தது.
Comments