கடனை அடைக்க குழந்தையை விற்ற தந்தை உட்பட 3 பேர் கைது

கடனை அடைக்க குழந்தையை விற்ற தந்தை உட்பட 3 பேர் கைது
சேலத்தில் கடனை அடைக்க தாயின் சம்மதத்துடன் 6 மாத ஆண் குழந்தையை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டு, குழந்தை இறந்துவிட்டதாக நாடகமாடிய தந்தை உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
லைன் மேடை சேர்ந்த சவுக்கத் அலி, தாதகாப்பட்டியை சேர்ந்த சேட்டிடம் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
ஊரடங்கால் வாங்கிய கடனை சவுக்கத் அலியால் திருப்பி செலுத்த முடியவில்லை.
இந்த நிலையில், கடன் கொடுத்த சேட்டு கூறிய யோசனையை கேட்டு, தனது 6 மாத ஆண் குழந்தையை தாயின் சம்மதத்துடன் சுந்தரம் என்பவருக்கு விற்ற சவுக்கத் அலி, அந்த பணத்தில் கடனை அடைத்துள்ளார்.
உடல் நலக்குறைவால் குழந்தை இறந்ததாகவும் உறவினர்களிடம் இருவரும் நாடகமாடியுள்ளனர்.
புகாரின் பேரில், தனிப்படை அமைத்த போலீசார், குழந்தையை மீட்டனர்.
Comments