அரியானாவில் பாஜக மூத்த தலைவரை தற்கொலைக்கு தூண்டியதாக எஸ்பி மீது வழக்கு

0 1247
அரியானாவில் பாஜக மூத்த தலைவரை தற்கொலைக்கு தூண்டியதாக எஸ்பி மீது வழக்கு

அரியானாவில் பாஜக  மூத்த தலைவர் ஹரிஷ் சர்மாவை தற்கொலைக்கு தூண்டியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீதே குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

52 வயதான ஹரிஷ் சர்மா, தமது குடும்பத்தை போலீசார் டார்ச்சர் செய்வதாக கூறி விட்டு கடந்த 19 ஆம் தேதி கால்வாய் ஒன்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவரை காப்பற்ற குதித்த நண்பரும் இழுத்துச் செல்லப்பட்டார்.

இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அனில் விஜ்ஜின் உத்தரவின்படி, பானிப்பட்ட காவல் கண்காணிப்பாளர் மணிஷா சவுத்ரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கு கூட்டணி கட்சி தலைவரும் துணை முதலமைச்சருமான துஷ்யந்த் சவுதாலா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இப்படி போனால், மாநில டிஜிபி மீதே வழக்கு பதிவு செய்யப்படும் நிலை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments