எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் தூண்டுவதாக இந்தியா மீண்டும் குற்றச்சாட்டு

எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் தூண்டுவதாக இந்தியா மீண்டும் குற்றச்சாட்டு
எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் தூண்டுவதாக தனது குற்றச்சாட்டை மீண்டும் சர்வதேச சமூகத்தின் முன் இந்தியா வைத்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் நாடுகள் உள்ளிட்ட நாடுகளின் தூதர்களிடம் வெளியுறவு அமைச்சக செயலாளர் ஹர்ஷ் சிரிங்லா இதை மீண்டும் ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.
நக்ரோட்டா தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தானின் கை உள்ளது என்றார் அவர். கடந்த ஆண்டில் நடந்த புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு நக்ரோட்டா தாக்குதல் பெரிது என அவர் கூறினார்.
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 200 தாக்குதல் சம்பவங்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர் என்றார். 199 தீவிரவாதிகளை இந்தியா அழித்தொழித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
Comments