நிவர் புயல் முன்னெச்சரிக்கை: அரசு அறிவித்துள்ள 7 மாவட்டங்களில் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படாது என அறிவிப்பு

0 1755
நிவர் புயல் முன்னெச்சரிக்கை: அரசு அறிவித்துள்ள 7 மாவட்டங்களில் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படாது என அறிவிப்பு

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு அறிவித்துள்ள 7 மாவட்டங்களில் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி முதல் ஆம்னி பேருந்து சேவை நிறுத்தப்படும் என்றும், மறு உத்தரவு வரும் வரை பேருந்துகள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments