அமெரிக்காவில் அதிபர் மாற்ற நடவடிக்கைகளை துவக்க டிரம்ப் அனுமதி

அதிபர் மாற்றத்திற்கான பணிகளை துவக்க டிரம்ப் அனுமதி வழங்கியுள்ளதால் புதிய அதிபராக பைடன் பதவி ஏற்பதற்கான பணிகள் துவங்கின.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்து 3 வாரங்கள் ஆன பின்னரும், தோல்வியை ஏற்க டிரம்ப் மறுத்து வந்ததால், அதிபர் மாற்ற நடவடிக்கைகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.
இந்த நிலையில் டுவிட் பதிவு ஒன்றில், அதிபர் மாற்றத்திற்கு என்ன நடவடிக்கைகள் தேவையோ அவற்றை ஜிஎஸ்ஏ எடுக்கலாம் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதை அடுத்து நிர்வாக மாற்றத்திற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட வசதிகள் ஜோ பைடன் தரப்பிற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் தாம் வெற்றிக்காக தொடர்ந்து போராடப்போவதாகவும் டிரம்ப் டுவிட் பதிவில் சூளுரைத்துள்ளார்.
...fight, and I believe we will prevail! Nevertheless, in the best interest of our Country, I am recommending that Emily and her team do what needs to be done with regard to initial protocols, and have told my team to do the same.
— Donald J. Trump (@realDonaldTrump) November 23, 2020
Comments