கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

0 1156
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

கொரோனா தொற்று நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

கூட்டத்தில் டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மோசமான பாதிப்புக்குள்ளான மாநிலங்களின் நிலைமையை பிரதமர் மதிப்பாய்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கொரோனாவுக்கான தடுப்பூசி விநியோகம் மற்றும் அங்கீகாரம் குறித்து விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்குவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments