சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை... பலத்த காற்றுடன் மழை நீடிப்பு..!

0 6017

தென்மேற்கு வங்ககடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, கடலூர்  மாவட்டங்களில் விடிய விடிய பலத்த காற்றுடன்  மழை பெய்து வருகிறது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நள்ளிரவு முதல் பலத்த காற்றுடன் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது.

தொடர் மழை காரணமாக நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. 

மதுரவாயில், பூந்தமல்லி, போரூர், வளசரவாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் பெய்த திடீர் கனமழையால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். 

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றிரவு கனமழை கொட்டித்தீர்த்தது. பழவேற்காடு, மெதூர், திருப்பாலைவனம், பொன்னேரி, மீஞ்சூர், காட்டுப்பள்ளி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கனமழையால் சாலைகளில் நீர் நிரம்பி ஓடியது. 

மழை தொடரும்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டி விடும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments