நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக செவ்வாய் கிழமை நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைப்பு

0 1605
நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக செவ்வாய் கிழமை நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு வரும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக செவ்வாய் கிழமை நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு வரும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பிரிவு மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க சுமார் 350 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு சில மாவட்டங்களில் பேருந்து, ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வில் பங்கேற்பதற்காக ஏற்கனவே வெளியூர்களில் இருந்து சென்னை வந்துள்ள மாணவர்கள், பெற்றோருக்கு, மாற்று ஏற்பாடு செய்து தரப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

செவ்வாய்கிழமை மாலை நிலவும் சூழலைப் பொறுத்து அடுத்தடுத்த நாட்களில் நடைபெறவிருக்கும் கலந்தாய்வு தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments