அசாம் முன்னாள் முதலமைச்சர் தருண் கோகாய் காலமானார்

0 1114

சாம் மாநில முன்னாள் முதலமைச்சர் தருண் கோகாய் காலமானார். அவருக்கு வயது 86. கொரோனா பாதிப்பில் இருந்து அண்மையில் மீண்ட அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால்  நவம்பர் 2 ஆம் தேதி கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்த நிலையில், மாலையில் உயிர் பிரிந்து விட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்தார். தருண்கோகாய் மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

காங்கிரசின் மூத்த தலைவராக விளங்கிய தருண் கோகாய், அசாமில் தொடர்ந்து 15 ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகித்த பெருமைக்குரியவர் ஆவார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments