இளம்பெண்ணை மிரட்டிய வாலிபர் வெட்டிக்கொலை - 4 பேர் கோர்ட்டில் சரண்!

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர், கடலூரில் இருந்து கடத்தப்பட்டு ஆந்திராவில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 4 பேர் வேலூர் மாவட்டம் காட்பாடி நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் செம்மண்டலத்தை சேர்ந்தவர் அருள்மொழி. இவருடைய 27 வயது மகன் வினோத்குமார், சென்னையில் விநாயகம் என்பவரிடம் ஓட்டுநராக பணி செய்து வந்துள்ளார். அப்போது விநாயகத்தின் மனைவி பவானி நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால், அவருக்கு உதவியாக பவானியின் தங்கை மாமா விநாயகம் வீட்டிற்கு வந்து தங்கியிருந்துள்ளார்.
பவானியின் தங்கைக்குத் திருமணம் செய்ய முடிவு செய்து, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வினோத் குமார் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த நிலையில் அக்டோபர் 3 ம் தேதி அன்று, இளம்பெண் தான் படிக்கும் காஞ்சிபுரம் பச்சையப்பா கல்லூரியில் மாற்று சான்றிதழ் வாங்குவதற்காக ஓட்டுனர் வினோத் குமாருடன் காரில் சென்றுள்ளார். மாற்று சான்றிதழ் வாங்கிவிட்டு மீண்டும் சென்னை வந்து கொண்டிருக்கும் பொழுது, ஓட்டுனர் வினோத் குமார், இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து காரிலேயே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனை புகைப்படம் மற்றும் வீடியோவும் எடுத்து அவ்வபோது மிரட்யுள்ளார். அதன் பிறகு, ஓட்டுநர் வினோத் குமார் தொடர்ச்சியாக வீட்டிலேயே பலமுறை இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இருவரும் யாருக்கும் தெரியாமல் அடிக்கடி பேசுவதை மாமா விநாயகம் பார்த்துள்ளார். ஏற்கெனவே இளம்பெண்ணுக்கு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வினோத் குமாருடன் நிச்சயம் செய்திருப்பதால் இவர்கள் இருவரும் பேசி வருவதால் ஏதாவது பிரச்சினை ஏற்படும் என்று நினைத்து, விநாயகம் ஓட்டுநர் வினோத்குமாரை வேலையை விட்டு நீக்கி விட்டார். பத்தாம் தேதி வேலையை விட்டு நீக்கப்பட்ட வினோத்குமார் 11ஆம் தேதி சொந்த ஊர்
கடலூருக்கு வந்துள்ளார்.
இதற்குப்பிறகு விநாயகம் பவானியின் தங்கையிடம் என்ன பிரச்சனை என்று கேட்டுள்ளார். இதன் பின்னர்தான் இளம்பெண் உண்மையை கூறி, வினோத் குமார் வீடியோ மற்றும் போட்டோ எடுத்து வைத்து மிரட்டுவதையும் வீட்டிலேயே பலமுறை பாலியல் தொல்லை கொடுத்ததையும் கூறியுள்ளார்.
கடந்த 16-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த அவரை, மர்ம கும்பல் ஒன்று, வேனில் கடத்தி சென்றுள்ளது. இதுபற்றி அவரது தந்தை அருள்மொழி, கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேனில் கடத்திச் செல்லப்பட்ட வினோத்குமாரையும், அவரை கடத்திச் சென்றவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில், கடலூரைச் சேர்ந்த ஓட்டுனர் வினோத்குமார் உடல் ஆந்திர மாநிலம் கடப்பா நல்ல குட்ட பள்ளி அருகே கை கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளது. அருகாமையில் வினோத்குமாரின் அடையாள அட்டையும் கிடைத்துள்ளது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் ராமாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கொலையாளிகளைப் போலீசார் தேடிவந்த நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி நீதிமன்றத்தில் டில்லி, மகேஷ்குமார், நாராயணன் மற்றும் விநாயகம் ஆகியோர் சரணடைந்துள்ளனர்.
மேலும் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து வாழ்க்கையை சீரழித்ததற்காக வினோத் குமாரைக் கடத்தி கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் கூறியுள்ளனர். பெண்ணாசையில் தவறான பாதையில் சென்று, கடைசியில் கண்டம் துண்டமாக வெட்டுப்பட்டு உயிர் இழந்த பரிதாபமான நிலைக்கு ஆளாகியுள்ளார் ஓட்டுநர் வினோத் குமார்.
Comments