’புழலுக்கு வா பார்த்துக்கலாம்’ - தட்டிக்கொடுத்து சிறைக்கு அனுப்பிவைத்த பெற்றோர்!

0 32552

குற்றவாளிகளைக் கைது செய்து நீதி மன்றத்துக்கு அழைத்துச் செல்லும்போது பெற்றோர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுவது இயல்பு. ஆனால், விநோதமாக செயின் பறிப்பு குற்றவாளிகளிடம், ’செங்கல்பட்டு சிறை வசதியாக இருக்காது. புழல் சிறைக்கு வந்துவிடு பாத்துக்கலாம்’ என்று தட்டிக்கொடுத்து வழி அனுப்பியுள்ளனர் கடமை தவறாத பெற்றோர் சிலர்.  

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கம் பகுதியில்  கொள்ளை, வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் சமீப காலமாக அதிகமாக நடந்து வருகிறது. பொதுமக்கள் தொடர்ந்து புகார் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், கடந்த 21 - ம் தேதி சனிக்கிழமையன்று பெண் ஒருவரிடம் தங்க சங்கிலியைப் பறித்துக்கொண்டு ஓடிய கண்ணகி நகரைச் சேர்ந்த சரண், கோடீஸ்வரனை விரட்டிப் பிடித்த பொதுமக்கள், தர்ம அடிகொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கொள்ளையர்கள் பயன்படுத்திய பைக்கை கோபத்தில் தீயிட்டுக் கொளுத்தினர். சரண், கோடீஸ்வரன் ஆகிய இருவரும் கொடுத்த தகவலின் பேரில் குண்டுமணி என்ற மணிகண்டனும் கைது செய்யப்பட்டான். மணிகண்டன் மீது ஏற்கெனவே 11 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

குற்றவாளிகள் மூவரையும் போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைத்தனர். அப்போது, அவர்களின் பெற்றோர், செங்கல்பட்டு சிறை வசதியாக இருக்காது. புழல் சிறைக்கு வந்துவிடு பார்த்துக்கலாம்” என்று தட்டிக்கொடுத்து அனுப்பி வைத்தனர்.

சிறைக்குச் செல்லும் மகன்களைப் பார்த்து பெற்றோர் கதறி அழுவதற்குப் பதிலாகப் புழல் சிறைக்குச் சென்றுவிடும் பார்த்துக்கலாம் என்று வழியனுப்பி வைத்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments