சென்னை மீனவர்கள் இன்று இரவே கரைக்கு திரும்ப அறிவுறுத்தல் - அமைச்சர் ஜெயக்குமார்

0 1108
சென்னை மீனவர்கள் இன்று இரவே கரைக்கு திரும்ப அறிவுறுத்தல் - அமைச்சர் ஜெயக்குமார்

நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக 146 படகுகளில் கடலுக்கு சென்ற 1000க்கும் மேற்பட்ட சென்னை மீனவர்கள் இன்று இரவே கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நாட்டுப்படகு, வலைகள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

படகுகள் வலைகள் சேதம் அடைந்தால் உடனே கணக்கெடுத்து இழப்பீடு வழங்கப்படும் என்றும் மழை நீர் சூழ்ந்து மக்கள் வீடுகளில் சிக்கிக்கொண்டால் மீனவர்களின் படகுகள் மூலம் மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments